Saturday, July 27, 2024
HomeTamilபதுளையில் பேருந்து விபத்து !

பதுளையில் பேருந்து விபத்து !

பதுளை – லுணுகலை பகுதியில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

லுணுகலை – அடாவத்தை 13ஆவது கொலணி பகுதியில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, குறித்த பேருந்தில் 6 மாணவர்கள் பயணித்துள்ள நிலையில் அவர்களுள் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகி லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular