Saturday, July 27, 2024
HomeTamilபெரியம்மையால் கால்நடைகள் உயிரிழப்பு!!!

பெரியம்மையால் கால்நடைகள் உயிரிழப்பு!!!

வட மாகாணத்தில் மாவட்டங்களுக்கு இடையில் மாடுகளைக் கொண்டு செல்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாடுகளுக்கு இடையில் பரவும் பெரியம்மை காரணமாகவும் இவற்றை கட்டுப்படுத்தும் முகமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை உற்பத்தி சுகாதாரத்தினை களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமமாலி கொத்தலவல தெரிவித்துள்ளார்.

மாடுகளுக்கு இடையில் பரவும் வைரஸ் தொற்று காரணமாக இந்த தற்காலிக அனுமதி பத்திரம் வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரியம்மை நோய் காரணமாக 25 மாடுகள் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொற்று தொடர்ச்சியாக நீடிக்கப்பட மாட்டாது எனவும் விலங்குகளை தனித்தனியாக கட்டி வளர்ப்பதன் மூலம் அவற்றை கட்டுப்படுத்த முடியும் எனும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, பெரியம்மை நோய் காரணமாக யாழ்ப்பாணம் – மருதங்கேணி பகுதியில், 7 இற்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

அத்துடன், 15 கால்நடைகள் பெரியம்மை நோயுடன் இனங்காணப்பட்டுள்ளதாக இலங்கை அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்க பொருளாளரும் மருதங்கேணி கால்நடை வைத்தியருமான எஸ்.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

கால்நடைகளுக்கு, தோல்ப் பகுதியில் கொப்புளங்கள் ஏற்படல், கால்கள் வீங்குதல், பசியின்மை, காய்ச்சல் முதலான அறிகுறிகள் ஏற்படும்.

நோய்த் தொற்றுக்கு உள்ளான கால்நடைகளை தனிமைப்படுத்துவதன் மூலம், இந்த நோய்ப் பரவலைத் தடுக்க முடியும் என மருதங்கேணி கால்நடை வைத்தியர் எஸ்.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular