Saturday, July 27, 2024
HomeTamilஹிங்குராக்கொடவில் சர்வதேச சிவில் விமான நிலையத்தை நிர்மாணிக்க நடவடிக்கை!!

ஹிங்குராக்கொடவில் சர்வதேச சிவில் விமான நிலையத்தை நிர்மாணிக்க நடவடிக்கை!!

மின்னேரிய விமான நிலையம் என அழைக்கப்படும் ஹிங்குராக்கொட விமான நிலையத்தை சர்வதேச சிவில் விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த யோசனைகளை வெளியிட்டதுடன் விமான நிலையத்தின் நிர்வாகமும் செயற்பாடுகளும் தற்போது இலங்கை விமானப்படையின் கீழ் உள்ளதாக தெரிவித்தார்.

ஹிங்குராகொடவை சர்வதேச சிவில் விமான நிலையமாக மாற்றுவதன் மூலம் பொலன்னறுவை, அநுராதபுரம், சீகிரியா மற்றும் தம்புள்ளை ஆகிய இடங்களுக்கான விஜயங்களை இலகுவாக்க முடியும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த வரலாற்று, இயற்கை மற்றும் கலாசார தளங்களுக்கு அதிக வெளிநாட்டு பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதன் மூலம் அந்நிய செலாவணி வருவாயை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஏ 330 விமானங்கள் தரையிறங்குவதற்கும் புறப்படுவதற்கும் விமான நிலையத்தை மேம்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்க கள ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

“தற்போதைய 2,287 மீ ஓடுபாதையை 2,800 மீ வரை நீடித்தல், விமான நிலைய ஓடுபாதைக்கு அணுகல் பாதை அமைத்தல், விமான வழிசெலுத்தல் அமைப்பு அமைத்தல், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு (ATC) கோபுரம் மற்றும் விமான நிலையத்தில் பயணிகள் முனையம் ஆகியவை அத்தியாவசியமானவை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular