Saturday, July 27, 2024
HomeTamilஇந்தியாவில் வெரிஃபைடு கட்டண சந்தா முறை - மெட்டா நிறுவனம்

இந்தியாவில் வெரிஃபைடு கட்டண சந்தா முறை – மெட்டா நிறுவனம்

மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் இந்தியாவிலும் தனது கட்டண சந்தா முறையை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெப்ரவரி மாதத்தில் மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் தனது கட்டண சந்தா முறையை அறிவித்தது. வெரிஃபைடு கட்டண சந்தா முறையில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்கள் பணம் கொடுத்து வெரிஃபிகேஷன் பெற்றுக் கொள்ளலாம்.

முதற்கட்டமாக மெட்டா வெரிஃபைடு சேவை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் அறிவிக்கப்பட்டு, அதன்பின் தற்போது அமெரிக்காவிலும் மெட்டா வெரிஃபைடு சேவை வழங்கப்பட்டு வருகிறது. மெட்டா வெரிஃபைடு சேவைக்கான கட்டணம் 11.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவிலும் இந்த சேவைக்கான வெயிட்லிஸ்ட் ஒன்றை மெட்டா பிளாட்ஃபாரம் துவங்கி இருப்பதாகவும், விரைவில் சந்தா கட்டண விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், மெட்டா வெரிஃபைடு சந்தா முறைக்கான இந்திய கட்டணம் மொபைலில் மாதம் ரூ. 1,450 என்றும் வலைதளத்திற்கு மாதம் ரூ. 1,099 என்றும் தெரிவித்து இருக்கிறது.

மெட்டா வெர்ஃபைடு சேவை பயனர் அக்கவுண்ட்களில் புளூ டிக் வழங்குவதோடு, கூடுதல் பாதுகாப்பு வழங்குகிறது. வெரிஃபைடு சந்தா செலுத்துவோர் ஏதேனும் அரசு அடையாள அட்டையை கொடுத்து அக்கவுண்ட்-ஐ வெரிஃபை செய்து கொள்ளலாம். சந்தா செலுத்துவோருக்கு நேரடி வாடிக்கையாளர் சேவை, பதிவுகளை அதிக நபர்களுக்கு கொண்டு சேர்த்தல் போன்ற பலன்களை வழங்குகிறது.

இந்தியாவில் இந்த சேவை தற்போதும் பீட்டா டெஸ்டிங்கிலேயே உள்ளது. மெட்டா வெரிஃபைடு சந்தாவில் இணைய பயனர்கள் வெயிட்லிஸ்ட்-இல் இணைய வேண்டும் என மெட்டா தெரிவித்து இருக்கிறது. மெட்டா வலைதளத்தில் இருந்தபடி பயனர்கள் வெயிட்லிஸ்ட்-ஐ இயக்க முடியும்.

முன்னதாக எலான் மஸ்க்-இன் டுவிட்டர் தளத்தில் இதே போன்ற கட்டண முறையிலான வெரிஃபிகேஷன் சேவை அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular